செய்தி

கூட்டுறவு விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை குவிண்டால் ₹7,450 வரை ஏலம்

கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் இராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களின் நிலக்கடலை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. உயர்தரக் காய்கள் குவிண்டால் ஒன்றுக்கு ₹7,450 வரை ஏலம் போயின. ஏலத்துக்குச் சுமார் 1,400 மூட்டை நிலக்கடலை வந்தது. சராசரி விலை குவிண்டாலுக்கு ₹6,900 ஆக இருந்தது. சேலம், ஈரோடு, திருச்செங்கோடு பகுதி வியாபாரிகள் பங்கேற்ற இந்த ஏலம் மறைமுக ஏல முறையில் நடத்தப்பட்டது. நன்றாக உலர்த்திச் சுத்தமான மூட்டைகளில் கொண்டுவந்த விவசாயிகளுக்கே சிறந்த விலை கிடைத்ததாக விற்பனைக்கூட ஊழியர்கள் தெரிவித்தனர். இரண்டு வேலை நாட்களுக்குள் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அடுத்த ஏலம் புதன்கிழமை நடைபெறும். விவசாயிகள் தங்கள் வரத்தை ஒரு நாள் முன்னதாகவே விற்பனைக்கூட அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
0 கருத்துகள்

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை முதலில் பகிருங்கள்.