நிகழ்வு

இயற்கை விவசாயிகள் சந்தை

எப்போது

7:00 AM – 12:00 PM
இடம்
Weekly Market Grounds (Vaara Santhai), Rasipuram
இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார விவசாயிகள் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், கீரைகள், நாட்டுக்கோழி முட்டைகள், மரச்செக்கு எண்ணெய்கள், சிறுதானியங்கள், வெல்லம், தேன் ஆகியவற்றை இடைத்தரகர் இன்றி நேரடியாக விற்பனை செய்கின்றனர். பாரம்பரிய நெல் ரகங்கள், வீட்டுத் தயாரிப்பு வடகம், உள்ளூர் ஆலைகளின் புதிய ஜவ்வரிசிப் பொருட்களும் கிடைக்கும். துணிப்பைகளைக் கொண்டு வாருங்கள்; பெரும்பாலான கடைகளில் UPI வசதி உண்டு. வீட்டுத் தோட்டம் மற்றும் உரம் தயாரிப்பு குறித்த சிறு அமர்வு காலை 9 மணிக்குத் தொடங்கும்.

← வரவிருக்கும் எல்லா நிகழ்வுகளும்